புதிய கனா .

a dream created

Monday, October 25, 2004

 

துஷியந்தி கவிதை

image preview

கருவறை இருட்டாகவே இருக்கிறது
அதிகாலையின் வெளிச்சம்
சிட்டுக்குருவியின் கிறீச்சிடல்
பூக்களின் சிரிப்பு, நிலவின் ஒளி
எதுவுமில்லை. அவசரத்தில்
ஆறு நாள் முந்தி அம்மாவை
அழ வைத்து
இப்பூவுலகத்தில் அறிமுகமாக
பெண்ணாகப் பிறந்ததன் பூரிப்பு
அம்மா முகத்தில் வலியை மீறி
வந்தது. ஆனாலும் என்னை எண்ணியும்
ஓர் வலி அவள் கண்ணீரில் கரைந்தனவோ
ஆண்டுகள் பறந்து
அமைதியற்று
அல்லுறும்
மனிதர் மத்தியில்
வேசங்களின்
ஒத்திகை துன்புறுத்த
அக்கறையின் அதட்டல்கள்
காரணமின்றி வெறுப்பேற்ற
தனிமையான கணங்கள்
அச்சத்தை மூட்ட
பாதுகாப்பான
என் அம்மாவின் கருவறையில்
மீண்டும் நுழைய முயல்கிறேன்...


<மார்கழி 2003>

Comments: Post a Comment



<< Home

Archives

2004.10   2005.04  

This page is powered by Blogger. Isn't yours?